மராட்டியத்தில் 2½ மாதங்களுக்கு பிறகு 15 ஆயிரமாக குறைந்த கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கையும் சரிந்தது


மராட்டியத்தில் 2½ மாதங்களுக்கு பிறகு 15 ஆயிரமாக குறைந்த கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கையும் சரிந்தது
x
தினத்தந்தி 1 Jun 2021 3:23 PM IST (Updated: 1 Jun 2021 3:23 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 2½ மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 15 ஆயிரமாக குறைந்து உள்ளது. பலி எண்ணிக்கையும் சரிந்தது.

15 ஆயிரம் பேர்

மராட்டியத்தில் ஏப்ரல் மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இதையடுத்து கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் மே மாதம் தொடக்கம் முதல் மாநிலத்தில் பாதிப்பு குறைய தொடங்கியது. இந்தநிலையில் மாநிலத்தில் கடந்த 2½ மாதங்களுக்கு பிறகு நேற்று பாதிப்பு 15 ஆயிரமாக குறைந்து உள்ளது. அதன்படி 15 ஆயிரத்து 77 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி 15 ஆயிரத்து 51 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதேபோல மாநிலத்தில் பலி எண்ணிக்கையும் சரிந்து உள்ளது. நேற்று மேலும் 184 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தனர்.

குணமடைந்தவர்கள்

தொற்று பாதிப்பு குறைந்தது போல, மாநிலத்தில் குணமானவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கைய்உம் வேகமாக குறைந்து வருகிறது. மாநிலத்தில் தற்போது 2 லட்சத்து 53 ஆயிரத்து 367 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் பாதிப்பில் இருந்து 93.88 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர். மாநிலத்தில் நேற்று 1 லட்சத்து 93 ஆயிரத்து 446 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3 கோடியே 50 லட்சத்து 55 ஆயிரத்து 4 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 57 லட்சத்து 46 ஆயிரத்து 892 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில் 53 லட்சத்து 95 ஆயிரத்து 370 பேர் குணமாகி உள்ளனர். 95 ஆயிரத்து 344 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மும்பையிலும் சரிவு

தலைநகர் மும்பையிலும் பாதிப்பு அதிரடியாக குறைந்து உள்ளது. நேற்று நகரில் 17 ஆயிரத்து 865 பேருக்கு சோதனை செய்ததில் 676 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல 29 பேர் ஆட்கொல்லி ேநாய்க்கு பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 570 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமானார்கள். தற்போது நகரில் 22 ஆயிரத்து 390 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 14 ஆயிரத்து 884 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 433 நாட்களாக அதிகரித்து உள்ளது. தாராவியில் நேற்று புதிதாக 2 பேருக்கு மட்டு் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அங்கு 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story