கூத்தாநல்லூர் பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று சுகாதார பணிகள் மும்முரம்
கூத்தாநல்லூர் பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று சுகாதார பணிகள் மும்முரம்.
கூத்தாநல்லூர்,
உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா 2-வது அலையானது தீவிரம் அடைந்து வருவதால் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வருகிற 7-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நகராட்சி ஆணையர் லதா தலைமையிலான அலுவலர்களும், கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி தலைமையிலான போலீசாரும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் நகர பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மற்றும் சுகாதார பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஊரடங்கை மீறி நகர பகுதிகளில் வாகனங்களில் செல்வோர் வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கூத்தாநல்லூரில் நேற்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மும்முரமாக எடுத்து வருகிறது.

Related Tags :
Next Story