செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 909 பேர் பாதிப்பு 38 பேர் உயிரிழப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 909 பேர் பாதிப்பு 38 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 5 Jun 2021 6:25 AM IST (Updated: 5 Jun 2021 6:25 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 909 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 909 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 639-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 599 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்தனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2016- ஆக உயர்ந்தது. இதில் 8,024 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 388 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 ஆயிரத்து 258-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 60 ஆயிரத்து 357 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 15 பேர் உயிரிழந்தனர்.

இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,022- ஆக உயர்ந்துள்ளது. 3 ஆயிரத்து 879 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Next Story