திருவள்ளூரில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்ற வாலிபர் கைது
தமிழக அரசு கொரோனா வைரசின் 2-வது அலையை முழுவதுமாக கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக டாஸ்மாக் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி சிலர் மது பாட்டில்களை பதுக்கி அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து போலீசாருக்கு புகார்கள் வந்தது. இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி கிராமத்தில் வயல்வெளியில் மது பாட்டில்களை பதுக்கி சிலர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக கடம்பத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதை தொடர்ந்து போலீசார் நேற்று செஞ்சி கிராமத்தில் உள்ள வயல் வெளியில் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த செஞ்சி கிராமத்தை சேர்ந்த மதி (வயது 27) என்ற வாலிபர்
மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டு இருப்பதை கண்டறிந்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்த 220 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story