மூதாட்டியிடம் நகை பறிப்பு


மூதாட்டியிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2021 4:23 PM GMT (Updated: 14 Jun 2021 4:23 PM GMT)

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி : 

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகில் உள்ள குள்ளபுரத்தை சேர்ந்தவர் வீரப்பன் மனைவி பாண்டியம்மாள் (வயது 64). 

நேற்று முன்தினம் பாண்டியம்மாள் அதே பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் வேலை பார்த்துவிட்டு கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த மர்ம நபர் பாண்டியம்மாளின் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோடிவிட்டார். 

இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story