காஞ்சீபுரத்தில் டெல்டா பிளஸ் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளானவர் குணமடைந்தார்


காஞ்சீபுரத்தில் டெல்டா பிளஸ் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளானவர் குணமடைந்தார்
x
தினத்தந்தி 26 Jun 2021 7:35 AM IST (Updated: 26 Jun 2021 7:35 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் டெல்டா பிளஸ் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளானவர் குணமடைந்தார்.

காஞ்சீபுரம், 

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, காஞ்சீபுரத்தில் தலா ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இநத நிலையில் காஞ்சீபுரத்தை சேர்ந்தவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதியானது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பழனி தெரிவிக்கையில்:-

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 3-ந்தேதியன்று அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதன் காரணமாக தொழிற்சாலை மூலம் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பெங்களூரு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. தற்போது தான் அவரது பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாதிக்கப்பட்ட நாளன்றே தண்டலம் பகுதியிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தற்போது அவர் பூரண குணமடைந்து நலமுடன் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story