காஞ்சீபுரம் கொரோனா தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு பதாகை


காஞ்சீபுரம் கொரோனா தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு பதாகை
x
தினத்தந்தி 28 Jun 2021 8:32 AM IST (Updated: 28 Jun 2021 8:32 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவு வாயிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். இதுமட்டுமல்லாமல் அரசு வேலை நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் பணி காரணமாக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு செய்ய மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் காஞ்சீபுரம் மண்டல காவல்துறை துணைத்தலைவர் சத்யபிரியா ஆலோசனையின்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் அறிவுரையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவு வாயிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த டிஜிட்டல் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இதில் முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு தரும் வாசகங்கள் டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பப்படுகிறது. இந்த செயலை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

Next Story