காஞ்சீபுரத்தில் திருட்டுத்தனமாக மது விற்ற 6 பேர் கைது 354 மதுபாட்டில்கள் பறிமுதல்


காஞ்சீபுரத்தில் திருட்டுத்தனமாக மது விற்ற 6 பேர் கைது 354 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 July 2021 4:50 AM GMT (Updated: 5 July 2021 4:50 AM GMT)

காஞ்சீபுரத்தில் திருட்டுத்தனமாக மது விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். 354 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மது விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் பேரில், பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் கீழம்பி- காஞ்சீபுரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் 284 மதுபாட்டில்களை திருட்டுத்தனமாக விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது.

கைது

மது பாட்டில்களை பறிமுதல் செய்து கீழம்பி கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 25), பிரபு (22), சிறு காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ஹரிஹரன் (21), கிருஷ்ணகுமார் (20), ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல் சின்னையன்சத்திரம் மற்றும் கருக்குப்பேட்டை போன்ற பகுதிகளில் 70 மதுபாட்டில்களை திருட்டுத்தனமாக விற்க வைத்திருந்த சிங்காடிவாக்கத்தை சேர்ந்த அர்ஜுன்ராஜ் (40), பூசிவாக்கத்தை சேர்ந்த கமல் பாஷா (30) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் திருட்டுத்தனமாக மது விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story