எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி


எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 6 July 2021 6:39 AM IST (Updated: 6 July 2021 6:39 AM IST)
t-max-icont-min-icon

எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி.

சென்னை,

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு நல ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கப்பட்டது. அதில் சுமார் 10 கர்ப்பிணி பெண்களுக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசி போடப்பட்டது. இது குறித்து ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் விஜயா கூறியதாவது:-

முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டவுடன் 4 வாரங்கள் கழித்து 2-வது தவணை தடுப்பூசி போடப்படும். 1 முதல் 9 மாதங்கள் வரை கர்ப்பமாக உள்ள பெண்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்.

கர்ப்பிணி பெண்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை போடுவது சிறந்தது. தடுப்பூசி போடப்பட்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் எங்கள் கண்காணிப்பில்தான் இருப்பார்கள். பக்க விளைவுகள் வருவதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவு. அதனால் பயப்பட வேண்டியதில்லை. இதுவரை இங்கு 300 பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story