சென்னை விமான நிலையத்தில் ரூ.2¼ லட்சம் போதை பவுடர், கஞ்சா பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் நெதர்லாந்து அமெரிக்காவில் இருந்து பார்சலில் கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதை பவுடரை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு தபால் சரக்கக பிரிவுக்கு விமானத்தில் வந்த பாா்சல்களை சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது நெதர்லாந்து நாட்டில் இருந்து சென்னையில் உள்ள முகவரிக்கு ஒரு பாா்சலும், அமெரிக்காவில் இருந்து சேலத்தில் உள்ள முகவரிக்கு ஒரு பார்சலும் வந்தன.
2 பார்சல்களிலும் சான்றுகள் மற்றும் ஆவணங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பார்சல்கள் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்தனர்.
கஞ்சா-போதை பவுடர்
அதில் நெதர்லாந்தில் இருந்து வந்த பார்சலில் ‘மீதாம்பேட்டமைன்’ என்ற வகை போதை பவுடர் இருந்ததை கண்டுபிடித்தனர். ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 15 கிராம் போதை பவுடரை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
அமெரிக்காவில் இருந்து வந்த பார்சலில் உயர்ரக கஞ்சா இலைகள் இருந்தன. ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 100 கிராம் கஞ்சாவையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரூ.2 லட்சத்து 30 ஆயிரம்
2 பார்சல்களில் இருந்தும் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள போதை பவுடர், கஞ்சா ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பார்சல்களில் உள்ள முகவரிகளுக்கு சென்று விசாரித்தபோது அவை போலியானது என தெரியவந்தது.
வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வரும் போதை பொருள்களை கல்லூரி மாணவர்கள், வசதி படைத்த இளைஞர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story