கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் ரூ.3.18 கோடி அபராதம் வசூல் மாநகராட்சி நடவடிக்கை
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் ரூ.3.18 கோடி அபராதம் வசூல் மாநகராட்சி நடவடிக்கை.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்குள் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதளத்தின் வாயிலாக தெரியப்படுத்த உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஏப்ரல் 9-ந்தேதி முதல் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 5,907 நிறுவனங்களிடமிருந்தும் மற்றும் 29,096 தனிநபர்களிடமிருந்து ரூ.3.18 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.மேலும், திருமணம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யப்பட்ட 1,426 மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களில் மாநகராட்சி வருவாய்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 31 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை ரூ.1,29,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story