செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவிலில் கொரோனா தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்ற பொதுமக்கள்


செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவிலில் கொரோனா தடுப்பூசி இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்ற பொதுமக்கள்
x
தினத்தந்தி 11 July 2021 7:53 AM IST (Updated: 11 July 2021 7:53 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலும் 2 நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடாக உள்ளது. செங்கல்பட்டில் உள்ள அரசு கலை கல்லூரியில் நேற்று தடுப்பூசி இல்லை என தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது. தடுப்பூசி செலுத்துவதற்காக வந்த செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுபோல சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வசிக்கிறார்கள. இந்த ஊரை சுற்றி மகேந்திரா சிட்டி. ஒரகடம் சிப்காட், மறைமலைநகர் தொழிற்பேட்டை உள்ளன.

இதில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்கள் மையப்பகுதியான சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தங்கி வேலை பார்க்கின்றனர். இவர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே நிறுவனத்தில் அனுமதியென்றும் இல்லை எனில் சம்பளம் கிடையாது என்றும் நிபந்தனை வைப்பதால் பல இளைஞர்கள் சிங்கப்பெருமாள் கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். ஆனால் இந்த ஊராட்சிக்கு ஒதுக்குவது வெறும் 40 தடுப்பூசி மட்டுமே இதில் தனியார் ்நிறுவன ஊழியர்களே தடுப்பூசி செலுத்தி 
கொள்வதால் உள்ளூர்வாசிகளுக்கு தடுப்பூசி இல்லை என்ற நிலை ஏற்படுகிறது.

Next Story