காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் குரல் தேசிய குரலாக ஒலிக்க வேண்டும் கமல்ஹாசன் வலியுறுத்தல்


காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் குரல் தேசிய குரலாக ஒலிக்க வேண்டும் கமல்ஹாசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 July 2021 7:26 PM IST (Updated: 15 July 2021 7:26 PM IST)
t-max-icont-min-icon

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் குரல் தேசிய குரலாக ஒலிக்க வேண்டும் கமல்ஹாசன் வலியுறுத்தல்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘நடந்தாய் வாழி காவிரி’ என்று பாடும் நம்மை, ‘நின்றாய் நீ காவிரி’ என்று வாடும் நிலைக்கு தள்ளுகிறது கர்நாடக அரசு. தடை ஏதுமின்றி ஓடிக்கொண்டிருக்க வேண்டிய நதியில் ஏற்கனவே பல அணைகளை கர்நாடக அரசு கட்டிவிட்டது. மேலும் ஒரு அணையை கட்டி தமிழக விவசாயிகள் வாழ்வை கேள்விக்குறியாக்க நினைக்கும் கர்நாடக அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இரு மாநிலங்களுக்கிடையே நதிநீர் பங்கீட்டு பிரச்சினையை உரிய வழிமுறைகளின் மூலம் தீர்த்து வைக்கவேண்டிய தார்மீக பொறுப்பு, அரசியல் சாசன பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக மத்திய அரசு அதை உணரவில்லை. அரசியல் காரணங்களுக்காக காவிரி பிரச்சினையில் கர்நாடகாவின் பக்கமாகவே மத்திய அரசு சாய்ந்திருப்பது வழமை. இந்த அநீதி போக்கும் இனியும் தொடருவது நியாயமல்ல. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் குரல் தேசியக்குரலாக ஒலிக்க வேண்டும். நீதியின் குரலாக ஒலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story