கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் பொதுமக்களிடம் ஆர்வம் இல்லாததால் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் பொதுமக்களிடம் ஆர்வம் இல்லாததால் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 915 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 732 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் மிக பெரிய திறந்த வெளி முகாமான இங்கு கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ள பெரும்பாலனோர் ஆர்வம் காட்ட வில்லை.
முகாமையொட்டிய அரசு பள்ளியில் தொடர்ந்து 3 நாட்கள் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் அதிகபட்சமாக 80 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டு கொண்டனர். முகாமில் கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்ட நிலையிலும் இங்கு உள்ள பொதுமக்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் முகாமில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story