மாவட்ட செய்திகள்

கார் மோதி முன்னாள் ராணுவ வீரர் சாவு + "||" + Accident

கார் மோதி முன்னாள் ராணுவ வீரர் சாவு

கார் மோதி முன்னாள் ராணுவ வீரர் சாவு
மேலூர் அருகே கார் மோதியதில் முன்னாள் ராணுவ வீரர் இறந்தார்.
மேலூர்,

மேலூர் அருகே உள்ள சின்னசூரக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் சோனைதேவன் (வயது 65). முன்னாள் ராணுவ வீரர். இவர் இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு நான்கு வழி சாலையில் வந்துள்ளார். தெற்குதெருவில் உள்ள பெட்ரோல் பங்கில் வாகனத்துக்கு பெட்ரோல் போடுவதற்காக சாலையின் குறுக்கே திரும்பியுள்ளார். அப்போது அவரது பின்பக்கத்தில் மதுரை நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று, இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சோனைதேவன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. விபத்தில் விவசாயி பலி
கொட்டம்பட்டி அருகே விபத்தில் விவசாயி பலியானார்.
2. மோட்டார் சைக்கிள் மோதியது; சாலையை கடந்தவர் சாவு
செட்டிநாடு அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் சாலையை கடந்தவர் இறந்தார்.
3. மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
4. விபத்தில் கட்டிட தொழிலாளி பலி
மேலூர் அருகே விபத்தில் கட்டிட தொழிலாளி பலியானார்.
5. ராமநாதபுரத்தில் நடந்த விபத்தில் மாற்றுத்திறனாளி பலி
ராமநாதபுரத்தில் நடந்த விபத்தில் மாற்றுத்திறனாளி பலியானார்.