அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் பஸ்நிலைய வளாகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவச்சிலை அரசு அனுமதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்த பஸ் நிலைய வளாகத்தில் உள்ள இந்த சிலைக்கு மேற்புறத்தில் கோபுர கலசம் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபுர கலசத்தை யாரோ மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இது குறித்து அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கலசம் திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.