பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 அவதூறு வழக்குகள் ரத்து மு.க.ஸ்டாலின் உத்தரவு


பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 அவதூறு வழக்குகள் ரத்து மு.க.ஸ்டாலின் உத்தரவு
x
தினத்தந்தி 30 July 2021 6:54 AM IST (Updated: 30 July 2021 6:54 AM IST)
t-max-icont-min-icon

பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 அவதூறு வழக்குகள் ரத்து மு.க.ஸ்டாலின் உத்தரவு.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

2012-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுகள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் “பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 29-7-2021 அன்று (நேற்று) ஆணையிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story