சட்டமன்றத்தில் கருணாநிதி உருவப்படம் திறக்கப்படுவது தமிழகத்துக்கு பெருமை கனிமொழி எம்.பி. பேட்டி


சட்டமன்றத்தில் கருணாநிதி உருவப்படம் திறக்கப்படுவது தமிழகத்துக்கு பெருமை கனிமொழி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 2 Aug 2021 9:40 AM GMT (Updated: 2 Aug 2021 9:40 AM GMT)

சட்டமன்றத்தில் கருணாநிதி உருவப்படம் திறக்கப்படுவது தமிழகத்துக்கு பெருமை கனிமொழி எம்.பி. பேட்டி.

ஆலந்தூர்,

தி.மு.க. மகளிர் அணி செயலாளரான கனிமொழி எம்.பி., தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தன் வாழ்நாளில் தேர்தலில் தோல்வியையே பார்க்காத ஒரு தலைவர் கருணாநிதி. தான் போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து முதல்-அமைச்சராக, எதிர்க்கட்சி தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். சட்டமன்ற வளாகத்தில் அவர் படம் திறக்கப்பட உள்ளது. இது தமிழகம் பெருமை கொள்ளும் ஒரு நாள் ஆகும்.

கொரோனா காலகட்டத்தில் ஆஸ்பத்திரிகளுக்கு செல்வதில் பொதுமக்களில் பலருக்கு தயக்கம் இருக்கிறது. இந்தநேரத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் வரவேற்கப்பட வேண்டியது. மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருப்பது தி.மு.க.வின் தொடர் போராட்டத்துக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றிதான். இது முழுமையான வெற்றியல்ல என முதல்-அமைச்சர் ஏற்கனவே தெரிவித்து உள்ளார். முழுமையாக கிடைக்கும் வரை தி.மு.க. போராடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story