காஞ்சீபுரம் அருகே முத்தியால்பேட்டை மூலஸ்தம்மன் கோவில் ஆடித்திருவிழா


காஞ்சீபுரம் அருகே முத்தியால்பேட்டை மூலஸ்தம்மன் கோவில் ஆடித்திருவிழா
x
தினத்தந்தி 3 Aug 2021 9:41 PM IST (Updated: 3 Aug 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே முத்தியால்பேட்டை மூலஸ்தம்மன் கோவில் ஆடித்திருவிழா.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே முத்தியால்பேட்டை கீழத்தெருவில் உள்ள ஸ்ரீமூலஸ்தம்மன் கோவிலில், 21-வது ஆண்டு ஆடித்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.

இந்த திருவிழாவில் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்ட பக்தர்கள், அலகுகுத்தி, அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். நிகழ்ச்சியில், முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் குடும்பத்தினர் சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு கூழ் படைத்தனர். இரவு மூலஸ்தம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில், கிராம மக்கள், அவரவர் வீட்டில் இருந்து, சமூக இடைவெளி கடை பிடித்து அம்மனை தரிசனம் செய்தனர். விழாவில், கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு சாதனங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஆன்மீக பிரமுகர்கள் பிரேமா ரஞ்சித்குமார், ஆர்.வி. ஜோதியம்மாள், வக்கீல் ஆர்.வி.உதயன், பன்னீர், டில்லி, மதன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story