கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 6 Aug 2021 4:05 PM GMT (Updated: 2021-08-06T21:35:45+05:30)

கொரோனா தடுப்பூசி முகாம்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நல்லம்பாக்கம் ஊராட்சி மற்றும் ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் மற்றும் கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதனையடுத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மற்றும் சுகாதார பணியாளர்கள் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

இதில் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரிகிருஷ்ணன், சசிகலா, டாக்டர் தனசேகர், ஊராட்சி மன்ற செயலர் ஹரிகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story