வாடிப்பட்டி,
மதுரை நரிமேடு தாமஸ் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மகன் சுந்தர் (வயது 35). கொத்தனார். இவருக்கு பாண்டீஸ்வரி (30) என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.இந்நிலையில் சுந்தர் நேற்று மாலை வாடிப்பட்டியில் உள்ள மேஸ்திரியிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிசாலையில் ஆண்டிபட்டி இந்திரா காலனி அருகே சென்ற போதுபெரியகுளத்திலிருந்து மதுரைக்குச் சென்ற தனியார் பஸ், மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுந்தர் சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழக்குபதிவு செய்து பெரியகுளத்தை சேர்ந்த பஸ் டிரைவர் மோகன் (35) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.