வேளாண்மைக்கு தனி பட்ஜெட் வெளியீடு: தமிழக அரசுக்கு சீமான் பாராட்டு
வேளாண்மைக்கு தனி பட்ஜெட் வெளியீடு: தமிழக அரசுக்கு சீமான் பாராட்டு.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் முதன் முறையாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் வெளியிட்டிருப்பதை உளப்பூர்வமாக ஏற்று வரவேற்கிறேன். வேளாண்மைக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதற்கெனத் தனி பட்ஜெட் வெளியிட வேண்டும் என்ற கருத்தாக்கத்தை நாம் தமிழர் கட்சியும், பா.ம.க.வும் பல ஆண்டுகளாக முன்வைத்து வந்த நிலையில், தற்போது அக்கோரிக்கை முழக்கம் உயிரூட்டம் பெற்றிருப்பது அறிந்து பெரிதும் மகிழ்கிறேன்.
தி.மு.க. அரசால் வெளியிடப்பட்டிருக்கும் வேளாண்மை பட்ஜெட்டில் உள்ள பெரும்பாலான திட்டங்களும், இலக்குகளும், தமிழ்நாட்டின் எதிர்கால நலன்களைத் தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து நாம் தமிழர் கட்சி முன்வைத்த ஆட்சியின் செயற்பாட்டு வரைவில் இருக்கும் திட்டங்களை முழுமையாக அடியொற்றி இருப்பது நல்லதொரு முன்நகர்வாகும்.
இயற்கை சார்ந்த பணிகளுக்கும், வேளாண்மை சார்ந்த திட்டங்களுக்கும் தி.மு.க. அரசு முதன்மைத்துவம் வழங்கியிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், மதிப்புமிகு நன்றிகளையும் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story