செங்கல்பட்டில் லோக் அதாலத் 9-ந்தேதி வரை நடக்கிறது; நீதிபதி தகவல்


செங்கல்பட்டில் லோக் அதாலத் 9-ந்தேதி வரை நடக்கிறது; நீதிபதி தகவல்
x
தினத்தந்தி 3 Sep 2021 7:14 AM GMT (Updated: 3 Sep 2021 7:14 AM GMT)

லோக் அதாலத்தில் சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து அல்லாத குடும்ப வழக்குகள், நில எடுப்பு இழப்பீடு, வங்கி கடன் வழக்குகள், செக் மோசடி வழக்குகள், குற்றவியல் வழக்குகள் போன்ற அனைத்தும் எடுத்து கொள்ளப்படும்.

லோக் அதாலத்தில் சமரசமாக பேசி முடித்ததும் வழக்குகள் மீது மேல்முறையீடு கிடையாது. கோர்ட்டு கட்டணம் திரும்ப வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மைய கட்டிடத்தில் வருகிற 9-ந்தேதி வரை மதியம் 2½ மணி முதல் மாலை 4½ மணி வரை வழக்குகளை சமரசம் பேசி முடிக்க அமர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வழக்குகளை விரைவாக மற்றும் சுமுகமாக முடித்து கொள்ள விரும்புவோர் அவரவர் வழக்குகள் நடைபெறும் கோர்ட்டிலோ அல்லது செங்கல்பட்டு ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மையத்தையும் உடனடியாக அணுகுமாறு செங்கல்பட்டு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான மீனாட்சி தெரிவித்துள்ளார்.

Next Story