தேர்வு எழுத கால அவகாசம் தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவிகள்


தேர்வு எழுத கால அவகாசம் தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவிகள்
x
தினத்தந்தி 4 Sept 2021 4:28 AM IST (Updated: 4 Sept 2021 4:28 AM IST)
t-max-icont-min-icon

தேர்வு எழுத கால அவகாசம் தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

காஞ்சீபுரம்,

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி பட்டய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று முதல் ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவ, மாணவியர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆசிரியர் பட்டய பயிற்சி படித்த மாணவ, மாணவிகளுக்கு இதுநாள்வரை கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்று வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வு கட்டணம் செலுத்த முடியாமலும் அவதிப்பட்டு வரும் நிலையில், தேர்வு குறித்து திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மாணவ, மாணவிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். எனவே கால அவகாசம் இன்றி தேர்வுகள் நடத்தப்படுவதாகவும், அதனால் தேர்வுக்கு தயாராகி எழுதும் வகையில் கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவ, மாணவியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முற்றுகை

மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுத இருந்த ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவ மாணவியர்களில் பெரும்பாலானோர் தேர்வினை புறக்கணித்து உள்ள நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், மாணவ, மாணவிய பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்வு எழுத கால அவகாசம் கேட்டு கோரிக்கை மனுவினை அளித்தனர்.

Next Story