மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் துணிகரம் சார்பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 45 பவுன் நகை, பணம் கொள்ளை + "||" + Robbery of 45 45 worth of jewelery and cash at the home of an employee of the venture affiliate office in the afternoon

பட்டப்பகலில் துணிகரம் சார்பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 45 பவுன் நகை, பணம் கொள்ளை

பட்டப்பகலில் துணிகரம் சார்பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 45 பவுன் நகை, பணம் கொள்ளை
காஞ்சீபுரத்தில் சார்பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டில் 45 பவுன் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை,

காஞ்சீபுரம் பெரியார் நகர், பெரிய தோட்டத்தில் வசித்து வருபவர் ராஜி. இவர், சென்னை மீனம்பாக்கம் ராணுவ அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா. இவர், வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.


வழக்கம்போல் ராஜி பணிக்கு சென்றுவிட்டார். கவிதா காலையில் தன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மீண்டும் கவிதா மாலை வீடு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

45 பவுன் நகை கொள்ளை

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த 4 பீரோக்களை திறந்து அதில் இருந்த 45 பவுன் தங்க நகை, வைர தோடு மற்றும் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ஆகியற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேத்துப்பட்டு தனியார் நிறுவனத்தில் ரூ.72 லட்சம் கொள்ளை போன வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மகன் கைது
சென்னை சேத்துப்பட்டு தனியார் நிறுவன அலுவலகத்தில் ரூ.72 லட்சம் கொள்ளை போன வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மகன் கைது செய்யப்பட்டார். அவர் கொள்ளை தொழிலுக்கு வந்தது குறித்து போலீசாரிடம் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
2. நூதன முறையில் நகைகளை கொள்ளையடித்த அந்தமானை சேர்ந்தவர் கைது
அண்ணாநகர் நகைக்கடை ஊழியரை வீட்டிற்கு வரவழைத்து நூதன முறையில் மோசடி செய்து நகைகளை கொள்ளையடித்து தப்பிய அந்தமானை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
3. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா வேட்பாளரின் கணவர் கைது
நாங்குநேரி அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக பெண் வேட்பாளரின் கணவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
4. வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையன், காரில் தப்பிச்சென்றான்.
5. திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.