வண்டலூர் உயிரியல் பூங்காவில் குவிந்த பொதுமக்கள் கொரோனா தொற்று பரவும் அபாயம்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் குவிந்த பொதுமக்கள் கூட்டத்தால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
சென்னை,
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா, கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக மூடப்பட்டு கடந்த மாதம் 25-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து வண்டலூர் பூங்காவில் விலங்குகளை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ மற்றும் பஸ் போன்றவற்றின் மூலம் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு குடும்பம், குடும்பமாக வந்து குவிந்தனர்.
கூட்டமாக அமர்ந்தனர்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள பேட்டரி வாகனம் பதிவு செய்யும் இடம், நுழைவாயில் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
பேட்டரி வாகனத்தில் செல்வதற்காக ஒரே இடத்தில் அதிகளவிலான பொதுமக்கள் கூட்டமாக அமர வைக்கப்பட்டு இருந்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
இணைய தளத்தில் முன்பதிவு
வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட்டது மகிழ்ச்சி. ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க கூட்டம் அலை மோதுவதால் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவது இல்லை. இதன் காரணமாக கொரோனா தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
எனவே இனிவரும் காலங்களில் வண்டலூர் உயிரியல் பூங்கா ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பார்க்க பொதுமக்களுக்கு தமிழக அரசு தடை விதிக்கலாம். அல்லது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 ஆயிரம் பேர் மட்டுமே வண்டலூர் பூங்கா இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பார்க்க அனுமதிக்கலாம். இது சம்பந்தமாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story