கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் முறையான கிச்சை அளிக்கவில்லை என்று கூறி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதி கலெக்டர் அலுவலத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு நேதாஜி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 62). இவரது மனைவி மன்னம்மாள் (58). இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இந்த மாதம் 1-ந்தேதி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 4 நாட்களாக ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை அளிக்காமலும் முறையாக பதில் அளிக்காமலும் டாக்டர்களும், நர்சுகளும் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
தர்ணா போராட்டம்
மன உைளச்சலுக்கு ஆளான அவர்கள் தங்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி கொரோனா நோயாளிகளான வெங்கடேன், அவரது மனைவி மன்னம்மாள் இருவரும் நியாயம் கேட்டு செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் அவர்களிடம் சமரசம் பேசி அவர்கள் இருவரையும் அவர்களது கோரிக்கை படி பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story