முத்தியால்பேட்டை ஊராட்சியை காஞ்சீபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு விலக்கு அளிக்க பொதுமக்கள் கோரிக்கை
முத்தியால்பேட்டை ஊராட்சியை காஞ்சீபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு விலக்கு அளிக்க பொதுமக்கள் கோரிக்கை கலெக்டரிடம் மனு.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அருகே உள்ள முத்தியால்பேட்டை ஊராட்சியை காஞ்சீபுரம் மாநகராட்சியுடன் இணைக்காமல், கிராம ஊராட்சியாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் முத்தியால்பேட்டை ஆர்.வி ரஞ்சித்குமார் தலைமையில் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
அம்மனுவில் அவர்கள் கூறியதாவது:-
காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டை ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களையும் புதியதாக உருவாக்கப்படும் காஞ்சீபுரம் மாநகராட்சியுடன் இணைய இருப்பதாக அறிந்தோம். முத்தியால்பேட்டை ஊராட்சியில் 2,200 நபர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி செய்து வருகின்றனர்.
தற்போது முத்தியால்பேட்டை ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் அனைத்து குடும்பங்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மக்கள் நலன் கருதி முத்தியால்பேட்டை ஊராட்சியை காஞ்சீபுரம் மாநகராட்சியுடன் இணைக்காமல் தற்போது உள்ள கிராம ஊராட்சியாக செயல்படுத்தி தருமாறு அம்மனுவில் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story