அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை


அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
x
தினத்தந்தி 12 Sept 2021 7:46 PM IST (Updated: 12 Sept 2021 7:46 PM IST)
t-max-icont-min-icon

அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வயலூர் கிராமத்தில் சேமாத்தம்மன் கோவில் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல கோவில் பூசாரி கோவிலை திறப்பதற்காக சென்றார்.அப்போது கோவில் முன்பு இருந்த இரும்பாலான உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா மற்றும் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, கோவில் இரும்பு உண்டியலிலிருந்து பணம் திருட்டு போனது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story