கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் மெகா தடுப்பூசி முகாம் 15 ஆயிரம் பேருக்கு இன்று கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு


கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் மெகா தடுப்பூசி முகாம் 15 ஆயிரம் பேருக்கு இன்று கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு
x
தினத்தந்தி 12 Sept 2021 8:34 PM IST (Updated: 12 Sept 2021 8:34 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் இன்று நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாமில் 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி,

தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழக சுகாதாரத்துறையினர் சார்பில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் அடிபடையில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகளில் இன்று 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மேற்கண்ட மெகா தடுப்பூசி முகாமையொட்டி நேற்று உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், சத்துணவு பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைகள்

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ், ஒன்றியக்குழுத்தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், துணைத்தலைவர் மாலதி குணசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 125 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வாயிலாக தடையின்றி தடுப்பூசிகள் செலுத்த ஏற்பாடு செய்வது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தமிழக அரசின் இத்தகைய சிறப்பு இலக்கை அடைவதற்கு அனைவரும் தங்களை முழுமையாக உட்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

Next Story