காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் 1779 பேர் வேட்பு மனு தாக்கல்


காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் 1779 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 18 Sept 2021 2:22 PM IST (Updated: 18 Sept 2021 2:22 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில், நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு நேற்று மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 வேட்பு மனுக்களும், 5 ஒன்றியங்களில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 95 வேட்பு மனுக்களும், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 624 வேட்புமனுக்களும் என மொத்தம் 724 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் நேற்று மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஒருவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 11 பேர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு-140 பேர், கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு 1055 பேர் என மொத்தம்-1207 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Next Story