உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள் சீமான் குற்றச்சாட்டு.
பூந்தமல்லி,
இலங்கை தமிழர் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து இறந்து போன திலீபனின் நினைவு தினம், சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. திலீபனின் உருவ படத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை தி.மு.க.வினர் கடத்துகிறார்கள். பெண் வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள். அவர்களால் நாங்கள் தலைமறைவாக இருக்கிறோம். தேர்தலில் விலகி இருந்தால் பணமும், அரசு வேலையும், ஒப்பந்தமும் வாங்கி தருகிறோம் என்று தி.மு.க.வினர் கூறுவதாக எனது கட்சியினர் என்னிடம் தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story