மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் சுத்தியல், முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைத்து கடத்தி வந்த ரூ.66 லட்சம் தங்கம் பறிமுதல் + "||" + Rs 66 lakh gold smuggled at Chennai airport

சென்னை விமான நிலையத்தில் சுத்தியல், முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைத்து கடத்தி வந்த ரூ.66 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் சுத்தியல், முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைத்து கடத்தி வந்த ரூ.66 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் குவைத்தில் இருந்து சுத்தியல், முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைத்து கடத்தி வந்த ரூ.66 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 588 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சென்னையைச் சோ்ந்த 38 வயது பயணியை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் சுத்தியல் ஒன்று இருந்தது. தான், தச்சுவேலை செய்து வருவதால் சுத்தியலை கொண்டு வந்ததாக அவர் கூறினார்.


ஆனால் அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் சுத்தியலை தனித்தனியாக பிரித்து பார்த்தனர். அதில் சுத்தியலின் கைப்பிடிக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனா். அவரிடம் இருந்து ரூ.14 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 341 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

முகம் பார்க்கும் கண்ணாடி

அதேபோல் குவைத்தில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த பயணியின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்த போது முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது. சந்தேகத்தின்பேரில் அந்த கண்ணாடியை கழற்றி பார்த்தபோது கண்ணாடி பிரேமில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.52 லட்சத்து 9 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 247 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.66 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 588 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக மதுரையை சேர்ந்த வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்திகள்

1. சார்ஜா, துபாயில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்துக்கு சார்ஜா, துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1½ கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
2. திருச்சி விமான நிலைய கழிவறையில் கிடந்த ரூ.45 லட்சம் தங்கம்
திருச்சி விமான நிலைய கழிவறையில் கிடந்த ரூ.45 லட்சம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இந்த தங்கம் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; ரூ.23.82 லட்சம், 4.87 கிலோ தங்கம் பறிமுதல்
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.23.82 லட்சம் ரொக்கம் மற்றும் 4.87 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
4. மேல்மருவத்தூரில் வாகன சோதனையின்போது ரூ.1 கோடிக்கு விற்க முயன்ற சாமி சிலைகள் பறிமுதல்
மேல்மருவத்தூரில் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற சாமி சிலைகளை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்
காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.