புதுச்சேரியில் இன்று 64 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு


புதுச்சேரியில் இன்று 64 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2021 8:26 AM GMT (Updated: 2021-10-01T13:56:07+05:30)

புதுச்சேரியில் தற்போது 791 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 38 பேர், காரைக்காலில் 16 பேர், ஏனாமில் 1 பேர், மாஹேவில் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,26,431 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. புதுச்சேரியில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,840 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 103 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,23,800 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 791 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story