மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் + "||" + Protest against relocation of Tasmac store in Kanchipuram

காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வெள்ளகுளத்தெரு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடை அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்தனர்.

இதில் இந்த டாஸ்மாக் கடையை சுற்றிலும் குடியிருப்புகள் இல்லை என டாஸ்மாக் மேலாளர் பதில் அளித்ததால், இது குறித்தும் மாவட்ட கலெக்டருக்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.


இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற அறிவுறுத்தினார்.

ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யும் நிலை உருவானதால் கடைக்கு மது குடிக்க வருபவர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் கடையின் முன்பு பீர் பாட்டிலுடன் கடையை மாத்தாதீங்க என கோரிக்கை முழக்கம் எழுப்பி கடையின் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிவகாஞ்சி போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தி இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பாபர் மசூதி இடிப்பு தினம்: த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
2. கல்லூரி மாணவிகளிடம் தவறாக நடந்த பேராசிரியர் கைது
கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதுடன், பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்யக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
3. முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்த கோரிக்கை: மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கல்லூரி மாணவிகளிடம் தவறாக நடந்த பேராசிரியர் கைது
கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதுடன், பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்யக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
5. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரி பா.ஜ.க. விவசாய அணி ஆர்ப்பாட்டம்
ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரி பா.ஜ.க. விவசாய அணி ஆர்ப்பாட்டம் மாட்டு வண்டி மூலம் பங்கேற்றனர்.
!-- Right4 -->