பஸ் சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் சாவு


பஸ் சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் சாவு
x
தினத்தந்தி 1 Oct 2021 10:14 AM GMT (Updated: 1 Oct 2021 10:14 AM GMT)

பஸ் சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் சாவு.

மீஞ்சூர்,

மீஞ்சூர் பக்தவச்சலம் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 54). இவர் தனது இருசக்கர வாகனத்தில் மீஞ்சூர்-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் புங்கம்பேடு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்தது. இதனை ஓட்டி வந்த ஸ்ரீதர் பள்ளத்தில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி ஸ்ரீதர் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story