திண்டுக்கல்லில் பலத்த மழை
திண்டுக்கல்லில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. மழை ஓய்ந்த பின்னர் மீண்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் நேற்று காலையில் வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது. இதற்கிடையே மதியத்துக்கு பின்னர் வானில் மேகங்கள் திரண்டன. இதையடுத்து சுமார் 20 நிமிடங்கள் வரை மழை பெய்தது. இதனால் திண்டுக்கல்லில் வெப்பம் குறைந்து இதமான குளிர் நிலவியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் பலத்த காற்று வீசியதால் தெய்வசிகாமணிபுரத்தில் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சார வினியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது. காற்று மற்றும் மழை ஓய்ந்த பின்னர் மீண்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story