கோவில்களை திறக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு


கோவில்களை திறக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு
x

வெள்ளி,சனி, ஞாயிற்று கிழமைகளில் கோவில்களை திறக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் பாஜக வரும் 7-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

சென்னை,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்பட அனைத்து மதவழிப்பாட்டு தளங்கள் திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கோவில்களை திறக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் வரும் 7-ஆம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

வரும் 7-ம் தேதி காலை 11 மணிக்கு இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக அறிவித்துள்ளது. கோவில்களை திறக்கக்கோரி பாஜக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Related Tags :
Next Story