கர்நாடகத்தில் புதிதாக 451 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 451 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Oct 2021 9:44 PM GMT (Updated: 9 Oct 2021 9:44 PM GMT)

கர்நாடகத்தில் புதிதாக 451 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 45 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 451 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதுவரை வைரஸ் தொற்றுக்கு 29 லட்சத்து 80 ஆயிரத்து 621 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 9 பேர் இறந்த நிலையில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 875 ஆக உள்ளது.

  நேற்று 1,455 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 29 லட்சத்து 32 ஆயிரத்து 322 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 10 ஆயிரத்து 395 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பெங்களூரு நகரில் 187 பேர், மைசூருவில் 48 பேர், ஹாசனில் 43 பேர், உத்தர கன்னடாவில் 37 பேர், தட்சிண கன்னடாவில் 27 பேர் உள்பட 451 பேர் புதிதாக கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். பெங்களூரு நகரில் 3 பேர், துமகூருவில் 2 பேர், தாவணகெரே, தார்வார், ஹாசன், உத்தர கன்னடாவில் தலா ஒருவர் இறந்தனர். 24 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story