கார் மோதி தி.மு.க. பிரமுகர் பலி
கொட்டாம்பட்டி அருகே கார் மோதி தி.மு.க.பிரமுகர் பலியானார்.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே உள்ள வலைச்சேரிபட்டியை சேர்ந்தவர் ராமையா(வயது 65). இவர் கொட்டாம்பட்டி தி.மு.க. மேற்கு ஒன்றிய குழு உறுப்பினராக இருந்தார். இந்த நிலையில் ராமையா நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து கொட்டாம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். நான்கு வழி சாலையை கடக்கும்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராமையாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே ராமையா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் மின்காஜ் அகமத்தை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
Related Tags :
Next Story