தென்காசியில் கொலை செய்யப்பட்டவர் மதுரை நிதி நிறுவன அதிபரா?போலீஸ் விசாரணை


தென்காசியில் கொலை செய்யப்பட்டவர் மதுரை நிதி நிறுவன அதிபரா?போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 20 Oct 2021 1:00 AM IST (Updated: 20 Oct 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் போலீஸ் அலுவலகத்திற்கு நிபந்தனை கையெழுத்து போட சென்ற நிதிநிறுவன அதிபர் திடீரென மாயமானார். இதற்கிடையே தென்காசியில் கொலை செய்யப்பட்டவர் மதுரை நிதி நிறுவன அதிபரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை, 

மதுரையில் போலீஸ் அலுவலகத்திற்கு நிபந்தனை கையெழுத்து போட சென்ற நிதிநிறுவன அதிபர் திடீரென மாயமானார். இதற்கிடையே தென்காசியில் கொலை செய்யப்பட்டவர் மதுரை நிதி நிறுவன அதிபரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நிதிநிறுவன அதிபர் மாயம்

மதுரை எல்லீஸ்நகர், கென்னட் ரோடு பகுதியை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்கவர் தனியார் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். அதில் நடந்த முறைகேடு காரணமாக அவர் உள்ளிட்ட நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நிதி நிறுவன அதிபர் நேற்று முன்தினம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நிபந்தனை கையெழுத்து போட சென்றுள்ளார்.
அதன் பின்னர் அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. எனவே உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தொடர்ந்து எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி நேற்று மதியம் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன அதிபரை தேடி வந்தனர்.

கடத்தி கொலையா?

இதற்கிடையே ஒரு கும்பல் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரை அடித்து உதைத்து உள்ளனர். அவரை அந்த கும்பல் தென்காசியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இந்த நிைலயில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அந்த நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
ெதன்காசி ஆஸ்பத்திரியில் இறந்த நபர் மதுரையில் காணாமல் போன நிதி நிறுவன அதிபரா? என சந்தேகம் எழுந்து உள்ளது. தென்காசி ஆஸ்பத்திரியில் இறந்த நபரின் பெயரும், மதுரையில் காணாமல் போன நபரின் பெயரும் ஒரே மாதிரியாக இருந்தது. மதுரை நிதி நிறுவன அதிபர் தான் கடத்தி கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து தென்காசி போலீசார் மதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் மதுரை போலீசார் தென்காசி விரைந்து உள்ளனர். நிதி நிறுவன அதிபரின் குடும்பத்தினரும் ெதன்காசிக்கு விரைந்து உள்ளனர். நிதி நிறுவன அதிபரின் குடும்பத்தினர் அடையாளம் காண்பித்தால் தான் இறந்த நபர் யார் என தெரிய வரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story