விபத்தில் வாலிபர் பலி
கொட்டாம்பட்டி அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.
கொட்டாம்பட்டி,
.திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள தென்பள்ளிப்பட்டு அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்தவர் சுஜித்குமார். இவருடைய மகன் டெலக்ஷன் (வயது 21), அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் மகன் சூர்யா (21). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மதுரையில் உள்ள நண்பர் வீட்டிற்கு வந்து வீட்டு மீண்டும் தென்பள்ளிப்பட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை டெலக்ஷன் ஓட்டி சென்றார்.கொட்டாம்பட்டியை அடுத்துள்ள பள்ளப்பட்டி நான்கு வழி சாலையில் சென்ற போது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலை தடுப்புச்சுவர் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்டதில் டெலக்ஷன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த சூர்யா மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story