காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாணவ - மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து கலெக்டர்கள் வரவேற்பு
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாணவ- மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து கலெக்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துர் ஊராட்சி ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் இனிப்புகள் மற்றும் எழுதுபொருட்களை மாணவ- மாணவிகளுக்கு வழங்கி வரவேற்றார்.
கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகள் நேற்று திறக்கப்பட்டன. காஞ்சீபுரம் மாவட்டம் ஒலிமுகமதுப்பேட்டை நகராட்சி நடுநிலை பள்ளி மற்றும் கீழம்பி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
காஞ்சீபுரம் வருவாய் மாவட்டத்திலுள்ள காஞ்சீபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் கல்வி மாவட்டங்களில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் தொடக்க நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8- ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
இதில் 683 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், 245 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,75,116 மாணவ- மாணவிகள் தங்களது கல்வியை 1½ ஆண்டுகளுக்கு பிறகு தொடங்க உள்ளனர்.
கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்
அனைத்து பள்ளிகளிலும் அரசு வெளியிட்டுள்ள கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி தேவைப்படும் இடங்களில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 15 நாட்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்கள், புத்தாக்க பயிற்சி புத்தகங்கள் வெளியிடப்பட்டு மாணவர்களுக்கு போதிக்கப்படவுள்ளது.
எனவே, அனைத்து குழந்தைகளும் தொடர்ந்து கல்வி கற்பதற்காக அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் நாம் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துர் ஊராட்சி ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் இனிப்புகள் மற்றும் எழுதுபொருட்களை பள்ளி மாணவ- மாணவி்களுக்கு வழங்கி வரவேற்றார்.
Related Tags :
Next Story