இருசக்கர வாகனங்கள் திருடிய 5 சிறுவர்கள் கைது
இருசக்கர வாகனங்கள் திருடிய 5 சிறுவர்கள் கைது 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தில் புகழ்பெற்ற கோவில்கள், மதுபான கடைகள் போன்ற பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 இருசக்கர வாகனங்கள் கடந்த சில நாட்களாக திருடப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்த நிலையில் காஞ்சீபுரம் புத்தேரிதெரு பகுதியில் சிவகாஞ்சி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 18 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்களை நிறுத்திய போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசினர். இதையடு்த்து அவர்களை சிவகாஞ்சி போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அவர்கள் காஞ்சீபுரத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.மேலும் அவர்களில் 2 பேர் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் 3 பேர் புஞ்சை அரசந்தாங்கள் பகுதியை சேர்த்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில், ரூ.4 லட்சம் மதிப்பிலான 7 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் அவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Tags :
Next Story