ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்; வாலிபர் பலி


ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 16 Nov 2021 6:12 PM IST (Updated: 16 Nov 2021 6:12 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

சாவு

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் (வயது 27). திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த பிரித்திவிராஜ் (26). இவர்கள் இருவரும் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இருவரும் தங்களது நண்பர்களை பார்க்க ஒரகடம் பகுதிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் சுங்குவார்சத்திரம் நோக்கி வந்துகொண்டிருந்தனர். சலையனூர் அருகே வல்லம்-வடகால் சிப்காட் சாலையில் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் விஜய் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நண்பர் பிரித்திவிராஜ் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பிரித்திவிராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story