செங்கல்பட்டு மாவட்டம் வேங்கடமங்கலம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா


செங்கல்பட்டு மாவட்டம் வேங்கடமங்கலம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா
x
தினத்தந்தி 5 Dec 2021 4:05 PM IST (Updated: 5 Dec 2021 4:05 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் வேங்கடமங்கலம் ஊராட்சியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி ரவி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் 58 பேருக்கு ஊராட்சி மன்ற தலைவர் தனது சொந்த செலவில் உணவு பொருட்கள், அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற செயலாளர் லிமாரோஸ்லின் மற்றும் தேவன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story