‘அப்பாவிகள் தேசத்துரோக சட்டத்தில் கைது' - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 Dec 2021 1:25 AM IST (Updated: 12 Dec 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

அப்பாவிகள் தேசத்துரோக சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை, 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில், “தேசத்துரோக சட்டத்தை (பிரிவு 124 ஏ) திரும்ப பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று உள்துறை அமைச்சகம் தன்னிடம் தெரிவித்துள்ளதாக, மத்திய சட்டத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். பல அப்பாவிகளை தேசத்துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய உள்துறை அமைச்சகம் முன்மொழிகிறது என்பதை அவர் சொல்லவில்லை.

தேசத்துரோக சட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்ததாக எந்த பதிவும் இல்லை என்று சட்டத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் நடவடிக்கைகளை செய்தியாக வெளியிடும் செய்தித்தாள்களை அவர் படிப்பதில்லை என்பதை அவர் சொல்லவில்லை” என்று அதில் தெரிவித்துள்ளார். 


Next Story