காஞ்சீபுரம் மாவட்டம் காவனூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் காவனூர் ஊராட்சியில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்திற்கான சிறப்பு கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் டி.ஜி.கோவிந்தன் முன்னிலை வகித்தார்.காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் காவனூர் ஊராட்சியில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்திற்கான சிறப்பு கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
கிராமசபை கூட்டத்தில் காவனூர், திருத்தவெளி உள்ளிட்ட பகுதிகளில் கிராம வளர்ச்சிக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான தீர்மானங்கள் கிராம மக்களின் ஆதரவுடன் கிராம சபையில் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில், வார்டு உறுப்பினர்கள் குட்டி என்ற வெங்கடேசன், இந்துமதி, கவுரி, ஞானாம்பாள், லட்சுமி, மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், கிராம நிர்வாக அலுவலர், தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், அங்கன்வாடி அமைப்பாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story