கும்மிடிப்பூண்டியில் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ்
கும்மிடிப்பூண்டியில் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பொன்னேரி ஆர்.டி.ஓ. செல்வம் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த கீழ்முதலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்டது அரியத்துறை கிராமம். இங்கு வசித்து வரும் 46 குடும்பங்களை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பொன்னேரி ஆர்.டி.ஓ. செல்வம் தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம், தாசில்தார் மகேஷ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., டி.ஜெ. கோவிந்தராஜன் கலந்து கொண்டு பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ்களை வழங்கினார்.
Related Tags :
Next Story