சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை கொள்ளை
மாங்காடு அருகே சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் வீட்டில் 31 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
வீட்டின் பூட்டு உடைப்பு
மாங்காடு அடுத்த இந்திராநகர் நேரு தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 41). இவர் விருகம்பாக்கம் பகுதியில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது தந்தை கடந்த மாதம் இறந்து விட்டதால் வீட்டை பூட்டிவிட்டு தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் நவநீதகிருஷ்ணனின் தம்பி இந்த வீட்டின் மாடியில் கட்டிட மேஸ்திரியை அழைத்து வந்து வீட்டு தளத்தின் மீது ஓடு பதிப்பதற்காக பூஜை செய்து விட்டு சென்று விட்டார். நேற்று காலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் நவநீதகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தார்.
நகை-பணம் கொள்ளை
வீட்டில் இருந்த 31 பவுன் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் மர்மநபர்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாங்காடு போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story